வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம்

By Daya

16 Aug, 2019 | 12:48 PM
image

வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவத் திருவிழா கடந்த  (14.09.2019) புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவில்  14 ஆம்  நாள்  இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுல சர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

https://www.youtube.com/watch?v=u1KT3Dk60Tc  

ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முத்துமாரி அம்மன் உள்வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்துடன், அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் வெளி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் வவுனியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தேங்காய் அடித்தும், கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர். பால் காவடி, தூக்கு காவடி என்பன எடுத்தும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right