கலாச்சார மண்டபத்திற்கு இரு பிரிவினர் அதிகார போட்டி - 2 ஆவது நாளாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Daya

16 Aug, 2019 | 12:47 PM
image

நோர்வூட் பிரதேச சபையின் பிரதான காரியாலயம் தற்போது இயங்கி வரும் பொகவந்தலாவ டின்சின் நகரிற்கு அருகில் உள்ள கலாச்சார மண்டபம் தொடர்பில் இராண்டாவது நாளாகவும் மக்களின் எதிர்ப்பு இடம்பெற்றது.

டின்சின் நகரவாசிகள், சித்தி விநாயக ஆலய கமிட்டிகள் மற்றும் டின்சின் தோட்ட மக்கள் ஆகியோர் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை இயங்கி வரும் கட்டடம் எமக்கு உரித்தான கட்டடம் என டின்சின் நகர வாசிகள் சொந்தம் கொண்டாடும் நிலையில் 15.08.2019 அன்றைய தினம் வீதிக்கு இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

அதேநேரத்தில் டின்சின் தோட்ட மக்கள் இது எமது தோட்டப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடம் எனவும், இது எமக்கு உரித்தான கட்டடம் எனவும், 15.08.2019 அன்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையினை எதிர்த்து 16.08.2019 அன்று காலை நோர்வூட் பிரதேசசபைக்கு முன்பாக டின்சின் தோட்ட மக்களும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் பிரதேச சபை அண்மை காலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரதேச சபைகளில் ஒன்றாகும். புளியாவத்தை நகரில் குறித்த பிரதேச சபையின் கட்டடம் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்தது.

இந்த நிலையில் பொகவந்தலாவ நகரத்திற்கு அண்மையில் உள்ள டின்சின் நகரத்திற்கு அருகில் டின்சின் தோட்ட மக்களுக்காக அத் தோட்ட காணியில் 2010ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கட்டியமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் நோர்வூட் பிரதேச சபையை நடத்திச் செல்ல அண்மையில் இந்த மண்டபத்தை நோர்வூட் பிரதேச சபை பெற்றுக்கொண்டது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட இவ் மண்டபம் தொடர்பில் டின்சின் நகர சித்தி விநாயகர் ஆலய கமிட்டிகள் சிலர் தொடர்ந்தும் இவ் மண்டபத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அதனையும் மீறிய நிலையில் குறித்த மண்டபம் நோர்வூட் பிரதேசசபை அதிகாரத்திற்குட்பட்டுள்ளதால் அதில் பிரதேச சபையை நடத்திச் செல்லும் அதிகாரம் தமக்கு உள்ளது என தெரிவித்து தற்போது பிரதேச சபை காரியாலாய நடவடிக்கைகள் அங்கு முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

இருந்தபோதிலும் இந்த மண்டப விவகாரம் தொடர்பாக உரிமை கோரும் நடவடிக்கையில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டின்சின் தோட்ட மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு 2009ஆம் ஆண்டு கொடுத்த வேண்டுக் கோளுக்கமைவாக அவர்களின் தோட்டத்தின் ஒரு பகுதியினை இ.தொ.காவின் முயற்சியில் கலாச்சார மண்டபமாக இக்கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதன்போது டின்சின் தோட்ட தொழிலாளியாக இருந்து இன்று டின்சின் நகரத்திற்கு சென்றுள்ள துரைராஜ் என்பவரின் பாதுகாப்பில் டின்சின் தோட்ட மக்கள் இந்த மண்டபத்தினை பொறுப்பளித்ததாக  கூறப்படுகின்றது.

ஆனால் தோட்டத்தை விட்டு நகரத்திற்கு வந்த இவர் இவ் காலாச்சார மண்டபத்தினை டின்சின் சித்தி விநாயகர் ஆலய அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இருந்தபோதிலும், டின்சின் தோட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட இந்த கலாச்சார மண்டபம் அம்மக்களுக்கே உரித்தான ஒன்றாகும் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு அந்த கலாச்சார மண்டபத்தில் நோர்வூட் பிரதேச சபை காரியாலயம் அமைத்து செயல்பட்டு வருவதற்கு டின்சின் தோட்ட மக்கள் எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால் டின்சின் நகரவாசிகளும், சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையினரே பலத்த எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.

ஆனால் பிரதேச சபை கட்டுப்பாட்டு பகுதியில் இக் கலாச்சார மண்டபம் அமைந்திருப்பதால் அதில் பிரதேச சபை காரியாலயத்தை கொண்டு செல்ல முடியும் என பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இக்கட்டடம் யாருக்கு சொந்தமானது என்ற அதிகார போட்டியே இந்த நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பிரதேச சபையை குறித்த கட்டிடத்தில் செயல்படுத்தி வர எதிர்ப்பு காட்டாத டின்சின் தோட்ட மக்கள் பிரதேச சபையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் வரை அதில் இயங்க சம்மந்தம் தெரிவித்துள்ள அதே வேளையில் பிரதேச சபை மாற்றம் செய்யப்படும் போது இக் கட்டிடத்தை டின்சின் தோட்ட மக்களின் அதிகாரத்திற்கு கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என பிரதேச சபை தவிசாளரை வலியுறுத்தியும் உள்ளனர்.

அதற்கு பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால் இக் கட்டிடம் டின்சின் தோட்ட மக்களுக்கு உரித்தான கட்டடம் என்பதற்கான தோட்ட அதிகாரியின் ஆவணங்கள் இ.தொ.காங்கிரஸ் இக்கட்டிடத்தை டின்சின் தோட்ட மக்களுக்கு கட்டி கொடுத்ததுக்கான ஆவணங்கள் அம் மக்களிடம் இருக்கின்றது.

இந்த நிலையில் டின்சின் நகரவாசிகள், சித்தி விநாயக ஆலய நிர்வாக சபையினர் இதில் அதிகாரம் கொள்வதற்கான காரணமும் என்னவென்ற கேள்வியும் எழும்பியுள்ளது. ஆனால் 2010ம் ஆண்டு முதல் இக் காலாச்சார மண்படத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பணத்தில் ஒரு தொகை பணம் டின்சின் தோட்ட கருமாரியம்மன் ஆலயத்திற்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இக்கட்டிடத்தில் தற்போது இந்த பிரதேச சபை இயங்குவதால் மாதம் ஒன்றுக்கு கட்டிடத்தன் கூலியாக ஒதுக்கப்படும் நிதியை டின்சின் தோட்ட கருமாரியம்மன் ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அத்தோட்ட மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தவிசாளர் ரவி குழுந்தைவேல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமூகமான முடிவு ஒன்று எட்டப்படும் என்ற வாக்குறுதி தவிசாளரால் வழங்கப்பட்டதையடுத்து டின்சின் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15