இந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது. 

மத்­து­கம வெலிப்­பென்ன என்ற இடத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இந்த தொழிற்­சா­லையின் அதி­கா­ர­பூர்வ செயற்­பா­டுகள் நாளை 17ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஐடியல் நிறு­வன ஸ்­தா­ப­கரும் தலை­வ­ரு­மான நளின்­வெல்­கம தெரி­வித்தார்.

ஐடியல் நிறு­வ­னத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வெலிப்­பென்ன பகு­தியில் 65 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் 7 ஏக்­கரில் வாகன உற்­பத்தி தொழிற்­சா­லையின் கட்­டு­மா­னப்­ப­ணிகள் நிறை­வ­டைந்­துள்­ளது. இந்த வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த திட்டம்" என பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு இத்­திட்டம் பெரிதும் உதவும். எனவே முதலில் நாடு முன்­னேற்­ற­ம­டைய வேண்டும். அதன் பின்னர் நாமும் வளம் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்றார்.  

உல­க­ளா­விய ரீதியில் பிர­பல்யம் பெற்ற பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மொன்று முதல் முறை­யாக இலங்­கையில் நேர­டி­யாக முத­லீடு செய்­துள்­ளது. இலங்கை முத­லீட்டு சபையின் ஊடாக இலங்­கையில் மஹிந்­திரா நிறு­வனம் முத­லீடு செய்­துள்­ளது. எனவே வாகன இறக்­கு­மதி விட­யத்தில் இனி இலங்கை வெளிநாட்டு நிறு­வ­னங்­களை நம்­பி­யி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று நளின் வெல்­கம மேலும் கூறினார். 

இந்­தி­யாவில் 2016இல் தயா­ரிக்­கப்­பட்ட மஹிந்­திரா KUV 100  100 என்ற ரக வாக­னத்­துடன் தயா­ரிப்பு வேலைகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த ரக வாக­னங்கள் இந்­தி­யாவில் மட்டும் ஒரு இலட்­சத்­திற்கு மேல் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. இது­போன்று 40 ஆயிரம் வாக­னங்­களை வரு­ட­மொன்­றுக்கு இலங்­கையில் தயா­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.