முதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை!

Published By: Vishnu

16 Aug, 2019 | 11:13 AM
image

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

நேற்றுமுன்தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. 

இதன் பின்னர் நேற்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றிருந்தது. நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டத்துடனும், சுரங்க லக்மால் 28 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று 227 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 267 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

சுரங்க லக்மால் 40 ஓட்டத்துடனும், திக்வெல்ல 61 ஓட்டத்துடனும், லசித் எம்புலுதெனிய 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க லஹரு குமார எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் அஜஸ் படேல் 5 விக்கெட்டுக்களையும், வில்லியம் சோமர்வில் 3 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டிக்களையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 18 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20