டென்­மார்க்கின் சுவீ­ட­னு­ட­னான எல்லைப் பிராந்­தி­யத்தில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்தப் போவ­தாக  டென்மார்க் பிர­தமர் மெட் பிரெ­டெ­றிக்ஸன் உறு­தி­ய­ளித்­துள்ளார்.கொப்பன்­ஹே­கனில் அண்­மையில் இடம்­பெற்ற இரு குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே அவர் இவ்­வாறு உறு­தி­ய­ளித்­துள்ளார்.


அந்தத் தாக்­கு­தல்கள் குறித்து  சுவீ­டனைச் சேர்ந்த இரு­ ஆண்கள் கைது ­செய்­யப்­பட்­டுள்­ளனர்.
தான் டென்­மார்க்கை மிகவும் சிறந்த வழி­மு­றையில் பாது­காக்க விரும்­பு­வ­தாக மெட் பிரெ­டெ­றிக்ஸன் தெரி­வித்தார்.''நீங்கள் சுவீடனி­லி­ருந்து டென்மார்க்கிற்குப் பய­ணித்து  எமது தலை­ந­கரின் மத்­தியில்  குண்­டொன்றை வைக்கும் நிலை­மையை எம்மால் அனு­ம­திக்க முடி­யாது'' என அவர் கூறினார். தாம் மேற்­படி  எல்லைப் பாது­காப்பை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையை எல்­லையைக் கடந்து வரும்  சுவீடன் நாட்டைச் சேர்ந்த சாதா­ரண  மக்­க­ளுக்கு எதி­ராக  முன்­னெ­டுக்­க­வில்லை எனவும் அந்­ந­ட­வ­டிக்கை குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை இலக்­கு­வைத்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.


கொப்­பன்­ஹே­க­னி­லுள்ள தேசிய வரி­ வி­திப்பு நிலை­யத்­துக்கு வெளியிலும்  பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கு அரு­கிலும் 3 நாட்கள் இடைவெளியில் குண்டு வெடிப்­புகள் இடம்­பெற்­றன. இந்த வெடிப்பு சம்­ப­வ­மொன்றில் சிக்கி ஒருவர் காய­ம­டைந்­தி­ருந்தார்.


இந்­நி­லையில் மேற்­படி குண்டு வெடிப்­புடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும்  இளை­ஞர்­களில் 22 வய­தான இளைஞன் ஒரு­வனை பொலிஸார் டென்மார்க் எல்­லைக்கு அண­மை­யி­லுள்ள சுவீடன் நக­ரான மல்­மோவில் வைத்து  பெரும் போராட்­டத்தை எதிர்­கொண்டு கைது ­செய்­துள்­ளனர்.


அதே­ச­மயம் தலை­ம­றைவா­கி­யுள்ள இரண்­டா­வது சந்­தே­க ­ந­பரை  கைது­செய்­வ­தற்கு சர்­வ­தேச கைது ஆணை­யொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூன் மாதம் பிர­த­ம­ராக தெரி­வு­செய்­யப்­பட்ட பிரெ­டெ­றிக்ஸன்  மேலும் தெரி­விக்­கையில்,  அண்­மையில் இடம்­பெற்ற வெடிப்பு சம்­ப­வங்கள் சுவீ­ட­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­பது தெளிவாக­வுள்­ள­தா­கவும் ஆனால் டென்­மார்க்­கிற்­குள்ளும் இதை­யொத்த பிரச்­சி­னைகள் உள்­ளமை அறி­யப்­ப­டு­வ­தா­கவும்  கூறினார்.


சுவீ­டனும் டென்­மார்க்கும் 16 கிலோ­மீற்றர்  நீள­மான நீரி­ணைக்கு மேலாக ஒரெசன்ட் பாலத்தின் மூலம் இணைப்பைக் கொண்­டுள்­ளன.  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அங்­கத்­துவ நாடுகள் என்ற வகையில் இந்த இரு நாடு­களும்  கட­வுச்­சீட்­டின்றி பய­ணத்தை மேற்­கொள்ளக்கூடிய ஷெங்கன் பிர­தே­சத்தில் அமைந்­துள்­ளன.

 

 2016ஆம் ஆண்டில்  இடம்­பெற்ற ஐரோப்­பிய குடி­வ­ரவு நெருக்­க­டி­யொன்­றை­ய­டுத்து சுவீடன்  எல்லைப் பிராந்­தி­யத்தில் ஆள­டை­யாள பரி­சோ­த­னை­களை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்­தது. டென்மார்க் இதை­யொத்த நடை­மு­றையை ஏற்­கெ­னவே  தனது நாட்டின் ஜேர்­ம­னிய எல்லைப் பிராந்­தி­யத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.