(எம்.எப்.எம்.பஸீர்)
எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்வைத்துள்ள விண்ணப்பத்தை விசாரிக்க ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், புவனேக அலுவிஹார, சிசிர ஆப்றூ, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமே இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், ஜனாதிபதியின் குறித்த விண்னப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, வியாக்கியானமாக இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM