நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் அக்கில தனஞ்சய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சியூட்டினார்.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி நேற்று காலியில் ஆரம்பமானது. தனது பந்துவீச்சு முறைமையை மாற்றியமைத்ததை அடுத்து விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

தனது புதிய பந்துவீச்சு முறைமையில் ஏற்படுத்தி மாற்றங்களுக்கு அமைய விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அக்கில தனஞ்சய 5 விக்கெட் குவியலை கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

இதை கொண்டாடும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியினரால் 5 என்ற இலக்கம், வாழ்த்துக்கள் அக்கில என குறிப்பிட்டு கேக் ஒன்று தயாரிக்கப்பட்டது.  அக்கில தனஞ்சய அந்த கேக்கை வெட்டி சக அணி வீரர்களுடன் மகிழ்ச்சியயடைந்தார்.