லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்ளனர்.
அங்கு மரக்கட்டை போல் கருகிக் கிடந்த, இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM