பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தினால் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு, நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் டுபாய் நாட்டில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளதோடு கடந்த 10 வருடங்களாக பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெயருடைய மகனொருவர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவரின் உறவினர்கள் எவரேனும் இருப்பின் அல்லது உறவினர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் கொழும்பு 01, சேர்.பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு உடனடியாக வருகைதரவும்.
அல்லது 011-2437635, 011-5668634 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM