வத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 

இலங்கை சுகாதார அமைச்சு மற்றும்  தேசிய குருதிமாற்று சேவை, லயன்ஸ் கழகம்,  வத்தளை பொலிஸ் பிரிவு மற்றும் வித்தியாலோக மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இரத்ததானம் செய்ய விரும்பும் நலன் விரும்பிகளை பங்கேற்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.