(எம்.எம்.சில்வெஸ்டர்)

இரண்டு வகையான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி நாளைய தினம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகிறது.

சரித் அசலங்க தலைமையில் களமிறங்கும் இலங்கை வளர்ந்துவரும் அணி பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட நான்கு நாள் தொடரிலும் விளையாடவுள்ளன.

ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 18 ஆம், 21 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன.  4 நாள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதியன்றும், இரண்டாவது போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதியன்றும் ஆரம்பமாகவுள்ளன.

இந்த இரண்டு வகையான போட்டிகளுக்குமான இலங்கை அணிக்கு காலி ரிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவரும் சகலதுறை வீரருமான சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ வழங்கியுள்ளார். 

இலங்கை வளர்ந்துவரும் ஒருநாள் போட்டி குழாம்

சரித் அசலங்க, சந்துன் வீரக்கொடி,ஹசித்த போயாகொட,பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, மினோத் பானுக்க,ஷம்மு அஷான், அமில அபோன்சோ, ரமேஷ் மெண்டிஸ், கலன பெரேரா, ஜெஹான் டேனியல், நுவன் துஷார, ஷிரான் பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க.

இலங்கை வளர்ந்துவரும் நான்கு நாள் போட்டி குழாம்

சரித் அசலங்க, லஹிரு உதான,சங்கீத் குரே, பெத்தும் நிஸ்ஸங்க,பிரமோத் மதுவன்த்த, மினோத் பானுக்க, ஜெஹான் டேனியல், ரமேஷ் மெண்டிஸ், அமில அபோன்சோ, நிஷான் பெரேரா, மொஹமத் ஷிராஸ், கலன பெரேரா, அசித்த பெர்ணான்டோ, சாமிக்க கருணாரட்ண, அஷேன் பண்டார.