திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை நகரிலுள்ள மண்டபத்திலிருந்து 8 வயது சிறுவன் ஒருவன் சடலமாக நேற்று (14) காலை மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் மவுண்ட்வர்ணன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். குறித்த சிறுவன் நேற்றுமுன்தினம் (13.08.2019)  மாலை முதல் காணாமல் போய்  இருந்ததாகவும் அவனை தேடிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

வழமையாகவே குறித்த சிறுவன் நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்புவான்  என்றும் நேற்றைய தினம் அவன் வீடு திரும்பாததையடுத்து  உறவினர்கள் அவனை தேடிய போதே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை பத்தனை நகரிலுள்ள மண்டபத்திற்கு சென்ற போது இரத்தக் காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.  சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

தற்போது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தந்தை கொழும்பில் தொழில் செய்து வருவதோடு தாய் மறுமணம் செய்து கொண்டு வேறாக வாழ்ந்து வருவதாகவும் இச்சிறுவனும் அவனின் உடன்பிறப்புகளுடன் உறவினர் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.