கடந்த மாதம் இந்தியாவின், சென்னை நகரத்திற்கு வந்த தனது மகனை காணவில்லை என காணமல்போன இளைஞனின் தாயர் அளித்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சென்னை விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிருப ராஜா மற்றும் கிருப ராணி ஆகிய இலங்கை நாட்டைச் சேர்ந்த தம்பதியினரின் 26 வயதுடைய தன ஷரத் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த ஜூலை மாதம் இலங்கையிலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளார். அத்துடன் அன்றைய தினமே அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்ற வேளையிலேயே காணாமல்போயுள்ளதாக அவரின் தாயர் சென்னை விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.