(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  உறுப்புரிமையானது கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும் பதவியையும் பெற்றுக்கொண்டதற்கு அமைய இயல்பாகவே இரத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 

கொழும்பு - 10 , டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.