(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை கூட்டுமாறு கோரி கடிதமொன்றை நாளை வெள்ளிக்கிழமை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறு பாடுகள் தொடர்பில் வினவிய தே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதே கட்சியில் அனேகமானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. அதேபோன்று கூட்டணியை அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் மாத்திரமே உறுதியான கூட்டணியொன்றை கட்டியெழுப்ப முடியும். அதுவே எனது நிலைப்பாடும் ஆகும்.
கடந்த முதலாம் திகதி கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைபாட்டினை வெளிப்படுத்தியிருந்தோம். தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டி தேவையும் எமக்கு எழுந்துள்ளது.
அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து தீர்மானிப்பதற்கு விரைவில் கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் அழைப்பது அவசியமாகும். இந்நிலையில் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் விரைவில் கூட்டுமாறு கோரி கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை கையளிக்க தீர்மானித்துள்ளோம்.
இதுவரையில் அனேகமான உறுப்பினர்கள் இந்த கோரிக்கை கடிதத்தில் கைசாத்திட்டுள்ளனர். எனவே நாளை வெள்ளிக்கிழமை இந்த கடிதத்தை அனுப்பி வைக்கவுள்ளோம். அதனை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானங்களுக்கு அமைவாக எங்களின் முடிவுகளை அறிவிப்போம்.
யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கூட்டணியை அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதால் வெற்றியை ஈட்டுவதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டணியை பொறுமையாக அறிவிக்கலாம். ஆனால் தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதே சிறந்த அரசியல் பயணத்துக்கு வாயப்பாக இருக்கம். ஜனாதிபதி வேட்பாளர் இன்றி கூட்டணியை அமைத்தால் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.
எது எவ்வாறாயினும் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எங்களிடம் எந்த கருத்து வேறுப்பாடும் இல்லை. வேட்பாளர் குறித்து கலந்துரையாடி விரைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM