இந்தியாவில் ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிவூட்டில் பின்னணி பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.

ஓர் ஆண்டுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பாடல் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் ராணு மோண்டால். தொழில்முறை பாடகராக இல்லாவிட்டாலும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் சிறப்பாக பாடியுள்ளார்.

அதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் பிரபலமானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது அவர் தொழில்முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.

இவருக்கு பிரபல பாடகரும் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தான் இசையமைக்கும் பொலிவூட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார்.