சனிக்­கி­ழமை இறுதித் தீர்­மானம்

Published By: Vishnu

15 Aug, 2019 | 09:50 AM
image

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­திலும் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியை அமைப்­ப­திலும் முரண்­பா­டுகள் நில­வி­வரும் நிலையில் நேற்று முன்­தினம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக் கும் அதன் கூட்­டுக்­கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற  கூட்­டத்தில் உப­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மூன்று முக்­கிய தீர்­மா­னங்­களும்   எடுக்­கப்­பட்­டுள்­ளன.  

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற  இந்த  கூட்­டத்தில்   கூட்­ட­ணியில் அங்கம் வகிக்­க­வுள்ள  கட்­சி­களின்  தலை­வர்­களும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும்   கலந்­து­கொண்­டனர். இதன்­போது  ஜன­நா­யக தேசிய கூட்­டணி அமைப்­பதன் தாமதம் குறித்தும் வேட்­பாளர் விவ­காரம் குறித்தும்   விரி­வாக பேசப்­பட்­டுள்­ளது.  அத­ன­டிப்­ப­டை­யி­லேயே  வேட்­பாளர்  விவ­காரம் குறித்தும்   ஜன­நா­யக தேசிய முன்­னணி குறித்தும் மூன்று முக்­கிய தீர்­மா­னங்கள் இந்­தக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. 

அந்­த­வ­கையில்  நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த உப­குழு  நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை கூடி   ஜன­நா­யக தேசி­ய­கூட்­டணி தொடர்பில்   பல முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது. 

 அதன்­படி  சனிக்­கி­ழமை கூட்­டத்­தின்­போது  ஜன­நா­யக தேசிய கூட்­டணி தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இந்தக் கூட்­டணி தொடர்­பாக நாட்­டுக்கு அறி­விக்கும் திக­தியும் அன்­றைய கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­படும்.  

 கூட்­டணி குறித்து நாட்­டுக்கு அறி­விக்கும் தினத்தில் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணிக்­கான ஆவ­ணத்தில்   பங்­கா­ளிக்­கட்­சிகள்  கையெ­ழுத்­தி­ட­வுள்­ள­துடன்   கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் அறி­விக்­கப்­ப­ட­வுள்ளார். க்ஷ

 இந்­தக்­கூட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அதன் பிரதி தலைவர்  பி. திகாம்பரம்,  முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஐ.தே.க. பிரதித்தலைவர்  சஜித் பிரேமதாஸ, மற்றும்    அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம்,  ரவி கருணாநாயக்க, ராஜிதசேனாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51