(எம்.எப்.எம்.பஸீர்)

கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிபானை இம்ரானுடன், அவர்  சார்ந்த விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்புகளைப் பேணுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சடடுக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராவானா பலய அமைப்பின் செயலர் மாகல்கந்தே சுதத்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டை மையப்படுத்தியே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.