(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. 

வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் கூட்டணி குறித்து பேசப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் குரலெழுப்ப கூட்டணிக்கான பங்காளி கட்சிகள் அதற்கு எதிரான நிலைப்பட்டில் செயற்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையடலின் போதும் கடும் வாதபிரதிவாதங்களே ஏற்பட்டுள்ளது. எனவே 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அலரி மாளிகையில் கூட்டணிக்கான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் , ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இச் சந்திப்பில் கலந்துக்கொள்ளவுள்ளார். பொது இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வழங்க தயாராகவே தான் உள்ளதாக செவ்வாய்க்கிழமை சந்திப்பின் போது வெளிப்படையாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.