மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 6.00 மணிமுதல் இன்று காலை 6 .00 மணிவரை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 147பேர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 8635 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.