(நா.தினுஷா)

நாட்டில் அண்மைக்காலமாக பெருமளவில் பேசப்பட்ட விவகாரமாக சோஃபா, எக்ஸா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் காணப்பட்டன. அவை குறித்து நான் தலையிடவில்லை.

தற்போது எம்முடைய வெளிவிவகாரக் கொள்கை யாதெனின், உலகலாவிய ரீதியில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை மேலும் விரிவுபடுத்துவது என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த கடப்பாடுகளை முழுமையாக இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். 

இரண்டாவதாக ஜீ.எஸ்.பி வரிச்சலுகையுடன் தொடர்புடைய வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் 23 ஆவது மாநாடு நேற்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. 

இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.