கல்முனை பாண்டிருப்பில் வயோதிப் பெண்னொருவரிடமிருந்து பட்டப்பகலில் இரண்டு தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையிட்டுச் சென்ற இருவரை  இன்று கல்முனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பாண்டிருப்பில் உள்ய தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னொருவரின் இரண்டு தங்கச் சங்கிலிகளை  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த 12ம் திகதி  மு.ப.11.00 மணியளிவில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன்  அங்கு வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த  சீ.சீ.டி.வீ. கேமராக்கள் ஊடாக கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டது.

அதன் உரிமையாளரான   மருதமுனையில் வசிக்கும் தச்சு வேலை செய்யும் ஒருவரை பொலிஸார் கைது செய்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிள் தனதென்றும் அதனை தம்மிடம் வேலைசெய்யும் வாழைச்சேனையைச் சேர்ந்த கூலியாட்கள் உணவு எடுத்துவருதவற்காக எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளதுடன்  கொள்ளையடித்தவர்களின் விபரங்களையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

அதன் பின்னர்   சம்பந்தப்பட்டவர்களை வாழைச்சேனை ஓட்மாவடியில் வைத்து பொலிஸார்  கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளையும் கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்

கல்முனை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரியின் அறிவுறுத்தலின் கீழ் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ததுடன்  நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.