(எம்.மனோசித்ரா)

மின்சக்தி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அனுமதி பத்திர முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உரிய தரத்தைக்கொண்ட மின்சார கட்டமைப்பை அமைப்பதன் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புடனான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அனுமதி பத்திர முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு முறையான தொழிலாக அடையாளங்கண்டு அவர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் மற்றும் கோரிக்கையை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். 

கொடகேன மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கு (மின்சக்தி தொழில்நுட்பவியலாளர்கள்) தொழில் அனுமதிபத்திரமொன்றை இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனுமதி பத்திரமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு சபையும் நிர்மாணத்துறை அபிவிருத்தி நிறுவனங்களின் அங்கத்தவர்களைக் கொண்ட தொழில்நுட்ப அனுமதி பத்திர முறையை வலுப்படுத்துவதற்கும் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு குழுக்களும் நியமிக்கப்படவுள்ளன.