இலங்கை வான்படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்களின் பதின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்று பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தலை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் கலந்துகொண்டிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.