(எம்.மனோசித்ரா)

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டையும் இதன் போதே அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சுதந்திர கட்சிக்குள் வேறுபட்ட நிலைப்பாடுகளே காணப்படுகின்றன. இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. 

எனினும் அது குறித்து கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி பின்னரே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.