அமெ­ரிக்­கா­வா­னது  வளை­குடா பிராந்­தி­யத்தை தீப்­பற்றி எரி­வ­தற்குத் தயா­ரான தீப்­பெட்­டி­யாக மாற்றி வரு­வ­தாக  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப் நேற்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

அமெ­ரிக்கா ஈரா­னுடன் செய்து கொண்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து  தனது நாட்டை வாபஸ் பெற்று  ஈரானின் எண்ணெய் ஏற்­று­ம­தி­களை முடக்கும் வகை­யி­லான தடை­களை மீள  விதித்­த­தை­ய­டுத்து  இரு தரப்பு நாடு­க­ளுக்கும் ஏற்­பட்ட முறுகல் நிலையால்  ஹொர்மஸ் நீரிணை மூல­மாக வளை­குடா பிராந்­தி­யத்­தி­னூ­டாக மேற்­கொள்­ளப்­படும்  எண்ணெய்க்  கப்­பல்­களின் போக்­கு­வ­ரத்து  பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளது.

கடந்த மே, ஜூன் மாதங்­களில்  6 எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடி­வைப்­பு­களால் சேத­ம­டைந்­தமை மற்றும் கடந்த ஜூலை மாதம் பிரித்­தா­னிய கொடி பறக்­க­வி­டப்­பட்ட எண்ணெய் தாங்கி கப்பலொன்றை ஈரான் கைப்­பற்றி தடுத்து வைத்­தமை  என்­ப­ன­வற்­றை­ய­டுத்து அமெ­ரிக்கா  வளை­குடா பிராந்­தி­யத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.   அந்தப் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் வர்த்­தகக் கப்­பல்­களைப் பாது­காக்கும் இலக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அந்த நட­வ­டிக்­கையில் பிரித்­தா­னி­யாவும் இணைந்து கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில் கட்­டாரை அடிப்­ப­டை­யாகக் கொண்ட  அல் ஜஸீரா ஊட­கத்­துக்கு ஜாவத் ஸரீப்  நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அளித்த விசேட பேட்­டியில், அந்த நீரிணை குறு­கி­யது.  வெளி நாட்டுக் கப்­பல்கள் அங்கு தமது பிர­சன்­னத்தை அதி­க­ரித்­துள்ள நிலையில் அது பாது­காப்புக் குறைந்­த­தாக மாறி­யுள்­ளது" என்று தெரி­வித்தார்.

அமெ­ரிக்­காவும் அதன் நேச நாடு­களும் அந்தப் பிராந்­தி­யத்தில் தமது ஆயு­தங்­களை நிரப்­பு­வதால் அது தீப்­பற்றி எரியத் தயா­ரான தீப்­பெட்­டி­யாக மாறி­யுள்­ள­தாக அவர் கூறினார்.

கட்­டாரின்  டோஹா நக­ருக்கு விஜயம் செய்­துள்ள ஸரீப் கட்டார் ஆட்­சி­யாளர் தமிம் பின் ஹமாத் அல் தானி­யுடன்  நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை பேச்­சு­வார்த்­தை  நடத்­தினார்.

மத்­தி­ய­கி­ழக்குப்  பிராந்­தி­யத்தில்  அமெ­ரிக்­காவின் மிகப் பெரிய இரா­ணுவத் தளங்­களைக் கொண்ட நாடா­க­வுள்ள கட்டார், அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் மோதல்­கள் கிளர்ந்­தெ­ழு­வ­தற்­கான சூழ்­நிலை ஏற்­ப­டு­வதைத் தடுக்க முயற்­சித்து வரு­கி­றது.

அதே­ச­மயம் ஈரா­னு­டனும் அமெ­ரிக்­கா­வு­டனும்  நல்­லு­றவைப் பேணி வரும் ஈராக்  மேற்­கு­லக நாடு­களில் படை­யினர் நிலை­நி­றுத்­தப்­ப­டு­வது அந்தப் பிராந்­தி­யத்தில் பதற்­ற­ நி­லையை அதி­க­ரித்து வரு­வ­தாக கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

"மேற்குலகப் படையினரின் பிரசன்னம் பதற்ற நிலையை அதிகரிப்பதாகவுள்ளது.  பேச்சுவார்த்தைகளினூடாக  பதற்ற நிலையை தணிவிப்பதை ஈராக் நாடுகிறது" என ஈராக்கிய  வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் அல் ஹக்கீம் தெரிவித்தார்.