ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கனடாவின் மொன்ட்ரியல் நகரில், ஏ.டி.பி. ரோஜர்ஸ் கிண்ண மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இதன் ஒற்றையர் பிரிவு இறுதியில் ‘நடப்பு சம்பியன்’ ஸ்பெயினின் நடால், ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர்.
அபாரமாக ஆடிய நடால் 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 5ஆவது முறையாக (2005, 2008, 2013, 2018, 2019) கிண்ணத்தை முத்தமிட்டார்.