ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்து கொள்ள அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த மாதம் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு உலக நாடு­களின் தலை­வர்­க­ளுடன் முக்­கிய சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்ளார்.

செப்­டெம்பர் 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நியூ­யோர்க்கில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள செல்லும் ஜனா­தி­பதி தன்­னுடன் முக்­கி­ய­மான அமைச்­சர்கள் சில­ரையும் அழைத்துச் செல்­ல­வுள்ளார்.

போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கு­வது உட்­பட்ட முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்­தான தனது நிலைப்­பாட்டை அவர் ஐ.நா. பொதுச் சபையில் வெளிப்படுத்துவாரென எதிர் பார்க்கப்படுகின்றது.