ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து பதற்றநிலை அதிகரித்து வருகின்ற நிலையில் சீனா தனது எல்லையை நோக்கி படையினரை நகர்த்தி வருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் உடனான எல்லையை நோக்கி சீனா தனது படையினரை நகர்த்துகின்றது என எமது புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவுமிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா தனது எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுத்தக்கூடிய விதத்தில் படையினரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையிலேயே டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்துதெரிவித்துள்ள டிரம்ப் ஹொங்கொங் நிலவரம் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளதுடன் எவரும் கொல்லப்படவோ காயமடையவோ மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.