மஹிந்தவுடன் இணக்கப்பாடில்லை - ஜனாதிபதி

Published By: Vishnu

14 Aug, 2019 | 09:37 AM
image

முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை.  அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக  வெளி­யான செய்தி  தவ­றா­ன­தாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்   அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது.   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  ஜனா­தி­ப­தியை  சந்­தித்த   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச்  சேர்ந்த  சிறு­பான்­மை­யின   அமைச்சர் ஒருவர்   ஜனா­தி­ப­தி­யிடம்  இந்த விடயம் தொடர்பில்  கேள்வி எழுப்­பி­ய­போதே   அவர்  இவ்­வாறு   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன்  நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது   பொது­ஜன பெர­மு­னவில்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம்  காணப்­பட்­ட­தா­கவும்  அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு   உரிய பத­வியை   தரு­வ­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்   ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.   இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா?  பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள்  ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று  அந்த அமைச்சர்   ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும்  ஏற்­ப­ட­வில்லை.  அவ்­வாறு  வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை..  அதனை நம்­ப­வேண்டாம் என்று  கோரி­யுள்ளார்.  

இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு  வழங்­காது  எமது  கூட்­ட­ணிக்கு ஆத­ரவை  வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர்  கோரி­ய­போது  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்   ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால்   இந்த விடயத்தில்  நடுநிலைமை வகிப்பது குறித்து  பரிசீலிக்க முடியும் என்று    ஜனாதிபதி   சுட்டிக்காட்டியதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13