மஹியங்கனை - அலுகெடியாகவ பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில்  இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.