நீலகிரி வெள்ள சேதம்: தி.மு.க 10 கோடி நிவாரண நிதி ;ஸ்டாலின் அறிவிப்பு.

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 09:24 PM
image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நீலகிரி பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.கவின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீலகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“நீலகிரியில் கனமழையால் ஏராளமான சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஏறக்குறைய 150 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டிருக்காது. 

இனிமேலும் இவ்வாறு மெத்தனமாக இருக்காமல் பணிகளை முடுக்கி விட வேண்டும். தி.மு.க இங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறது. மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான ஆ ராசாவுக்கு இருக்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார். 

கூடலூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேபோன்று மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர்கள் ஐந்து பேரும் தலா ஒரு கோடி ரூபாய் என 5 கோடி ரூபாய் வழங்கவிருக்கிறார்கள். மொத்தம் 10 கோடி ரூபாய் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தவிருக்கிறது. 

ஆ ராசா இங்கு மேலும் சில நாட்கள் தங்கியிருந்து நிவாரண பணிகளை முடுக்கி விட இருக்கிறார். பிரச்சனைகள் குறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார். இந்த இரண்டு நாட்களாக நான் செய்த ஆய்வுகளைத் தொகுத்து முதல்வரிடம் மனுவாக வழங்கப்படும்.” என்றார்.

முன்னதாக மு க ஸ்டாலின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, தலா ஒரு இலட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10