மலையக பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால்  மஸ்கெலியா பகுதியில் இரு தோட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன..

அந்த வகையில்  ஓல்டன் தோட்ட கீழ் பிரிவில் விநாயகர் ஆலயம் மற்றும் அப்பகுதி குடியிருப்புகளிலும் ஸ்டஸ்பி தோட்ட ஆலயத்திலும் கிராம சேவகர் அலுவலகமும் கவரவில கொலணி குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழிகியுள்ளன.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், தற்போது காட்டாறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் கரையோர மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் மக்கள் யாரும் நீரோடைகளில் நீராட வேண்டாம் என தெரிவித்தார்.