நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ‘கன்னிராசி’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது.. 

“பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ‘கன்னிராசி’ படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. 

நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததில்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

Related image

 முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.