களனி கங்கை, களுகங்கை மற்றும் ஜின் கங்கை ஆகிய நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதால், கித்துல்கலை மற்றும் தெரணியால பகுதியில் குறித்த ஆற்றை அண்மித்து வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு , களு கங்கை பெருக்கெடுக்கும் அபயாம் காணப்படுவதன் காரணமாக இரத்தினபுரி பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக  செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  ஜின் கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் நிலவுவதால் தவலம பிரேதசத்தில் ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.