தேசிய கொள்கைகள் புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் நடவடிக்கைக்கு  எதிராக, வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., 

குறிப்பாக கடந்த முப்பது வருடகாலமாக  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த வடகடல் நிறுவனமானது நல்லாட்சி அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படாது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 79 தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

வடக்கில் ஒரே ஓரு அரச தொழில்பேட்டையாக வடகடல் நிறுவனம், பிரதமர் அமைச்சின் கீழ் தற்போது உள்ளபோதிலும் இன்றுவரை எந்தவொரு நிதி ஒதுக்கமும் இல்லாது காணப்படுவதாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.

 இதன் போது அவர்கள் , ‘’ எமது காணியினை அபகரிக்காதே, பணை நிதியத்திற்கு ஒதுக்கிய எங்கே போனது,’’ ;’’ ஏமாற்றாதே ஏமாற்தே வடகடல் நிறுவன பணியாளர்களை ஏமாற்றதே; ‘’  , வடகடல் நிறுவனம் வடக்கு மக்களுக்கு இல்லையா போன்ற வாசங்கள் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.