நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர். 

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிற நிலையில் , நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நல்லூர் ஆலய வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

“கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மூவர் நேற்றிரவு 10 மணியளவில் ஆலய வீதியில் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.