(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர.

 

இப்போதே எம் அனைவர் சார்பிலும் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தரப்புடன் பேச்சுவாரத்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டால் இணைந்து பயணிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.