(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும்  ஒரே  நாளில் நடத்துவது என்பது  சாத்தியமற்றதொரு விடயம். மாகாண சபை தேர்தலை விரைவாக   நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சட்ட ஆலோசனை வழங்கினால் நிச்சயம் மாகாண சபை தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். 

 ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாராளுமன்ற  உறுப்பினர்  வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்

இன்றைய  நிலையில் மாகாண சபை தேர்தலே  முதலில் நடத்தப்பட வேண்டும்.  அரசியல் தேவைகளுக்காகவே  மாகாண சபை   தேர்தல் காலவரையறையின்றி  பிற்போடப்பட்டுள்ளது. 

இதற்கு  அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய தரப்பினரே   முழு பொறுப்பு கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.