அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர்  என சத்தமிட்டுள்ளார்.

உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

அந்த நபர் 41 வயது பெண்மணியை கத்தியால் குத்தியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் கத்தியுடன் காணப்பட்ட போதிலும் மூன்று பேர் அந்த நபரை மடக்கி பிடித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

21 வயது பெண்மணியொருவரின் உடலையும் மீட்டுள்ளோம் இந்த இரு சம்பவங்களிற்கும் தொடர்புள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.