(எம்.எம்.மின்ஹாஜ்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களுடைய வரி பணத்தை கொண்டு 600 மில்லியன் ரூபா செலவிட்டு குண்டு துழைக்காத கார்கள் இரண்டை கொள்வனவு செய்ததாக அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூரிலிருந்து நேற்று வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் வினவினேன். இந்த விடயம் பிரதமருக்கு கூட தெரியாது. இந்த கார் கொள்வனவை பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரே வேண்டியுள்ளனர என தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தினார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மீது இலங்கை வாழ் மக்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. எனக்கும் அவ்வாறான நிலைப்பாடே ஜே.வி.பி யின் மீது உள்ளது. ஜே.வி.பி யினர் ஊழல் மோசடி விடயத்தில் தரமான தரவுகளை வழங்குவதாகவே நாட்டு மக்கள் நம்பினர். இருந்தபோதிலும் நேற்று கொழும்பில்; நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளன.
ஊடகங்களினால் ஜே.வி.பி தொடர்பிலான ஏதாவது முரணான செய்திகள் பிரசுரமாகும் சந்தர்ப்பத்தில் அதனை சமாளிக்கும் வகையிலும் தங்களுடைய தவறுகளை மூடி மறைக்கும் வகையிலும் அரசியல் சாணக்கியமாக அரசாங்கத்தின் மீது தேவையற்ற விதத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
தற்போதைக்கு பாவனையிலுள்ள கார் இரண்டும் மகவும் பழமையானவையாகும். பிரதமருக்கு பாதுகாப்பற்ற வாகனமே வழங்கப்பட்டிருந்தது. அதன் பராமரிப்பிற்கு இரண்டு இலட்சம் ரூபா வரை தற்போதைக்கு செலவிடப்படுகின்றது. இதன் காரணமாகவே பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் குண்டு துழைக்காத கார் கொள்வனவு செய்ய திட்டமிட்டனர்.
இந்த இரண்டு கார் கொள்வனவிற்கு 128 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மிகுதி 448 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளோம்.
கடந்த காலங்களை போல் இல்லாமல் பிரதமரின் கார் கொள்வனவிற்கும் வரி செலுத்தப்படுகின்றது. பழைய வாகனத்தில் பாதுகாப்பு குறைந்தமையினாலேயே புதிய கார் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM