மாத்தறைப் பகுதியில் வைத்து இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, நூப்பே பகுதியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கடத்தல்காரர்களிடமிருந்து கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த இருவரையும் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.