அஜித் நடிப்பிலும் எச்.வினோத் இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் 4 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. 

போனி கபூர் தயாரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். 

‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படம் முதல் நாளில் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஞாயிறு வரை இந்தப்படம் தமிழகத்தில் மொத்த வசூலில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. 

சென்னையில் இந்தப் படம் முதல் 4 நாட்களில் மட்டும் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. 

ஒவ்வொரு நாளுமே ஒரு கோடியைத் தாண்டியே வசூல் செய்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் போனிகபூர். 

இதேவேளை, வெளிநாடுகளில் குறித்த படம்  வசூலில் ஒரு மில்லியன் டொலரைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.