எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்படலாம் என எம்.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் நிறுவன தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து  ஐ.சி.சி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் அண்மையில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறுப்பிடத்தக்கது.