அப்பிள் தொழில்­நுட்ப நிறு­வனமா­னது  தனது ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி உப­க­ர­ணத்­தி­லுள்ள பாது­காப்பு முறை­மை­களை முறி­ய­டித்து அதனை  ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்­க­ளுக்கு ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலரை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தாக சவால் விடுத்­துள்­ளது.

தமது கைய­டக்கத் தொலை­பே­சி­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அந்த நிறு­வனம் இந்த சவால் மிக்க போட்டி தொடர்பில் அறி­விப்புச் செய்­துள்­ளது. 

இணை­யத்­த­ளங்­களை ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்கள் தமது பயன்­பாட்­டா­ளர்­களை இலக்­கு­வைப்­பதை விடுத்து தமது கம்­ப­னி­யுடன் இணைந்து பணி­யாற்­று­வதை ஊக்­கு­விப்­பதை அப்பிள் நிறு­வனம் நோக்­காகக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

தாம் பயன்­பாட்­டா­ளரின் பாது­காப்­புக்கே முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தாக அப்பிள் நிறு­வ­னத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி ரிம் குக் தெரி­வித்தார். அந்­த­ரங்கத் தன்­மையை பேணு­வது தனி­ம­னித உரிமை என்ற வகையில்  கணி ­னியை ஊடு­ரு­ப­வர்­களால் அந்த உரிமை மீறப்­ப­டு­வதை தடுப்ப­தற் ­கான பாது­காப்பை தனது தொழில்­நுட்ப உப­க­ர­ணங்கள் கொண்­டுள்­ளதை நிச்­ச­யப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தாக அவர்  கூறினார். 

உல­க­மெங்­கு­முள்ள தனது 2  பில்­லியன் வாடிக்­கை­யா­ளர்­களின்  தனிப்­பட்ட தகவல்கள் கணினி களை ஊடுருவி தாக்குதல் நடத்துப வர்களால்  திரட்டப்படாதிருப்பது தொடர்பில் அப்பிள் நிறுவனம்  தீவிர கவனம் செலுத்துவதாக ரிம் குக் தெரிவித்தார்.