நோர்வே மசூதியில் இடம்பெறவிருந்த துப்பாக்கி தாக்குதலை முறியடித்த பாக்கிஸ்தானின் முன்னாள் விமானப்படை வீரரிற்கு பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.

சனிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மசூதியொன்றின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பாக்கிஸ்தானின் ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான முகமட் ரபீக்  தடுத்துநிறுத்தியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டநபருடன் போராடி அவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் ரபீக் என  மசூதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திடீரென வெளியில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை நான் கேட்டேன் என தெரிவித்துள்ள ரபீக் நான் துப்பாக்கிதாரியுடன் போராடி அவரை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தேன் அவர் எனது கண்ணில் அவர் தனது விரால் குத்தினார் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு துப்பாக்கிகள் ஒரு கைத்துப்பாக்கியுடன் அந்த நபர் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் மசூதியின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபரை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளின் போது ரபீக்கிற்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவரை உண்மையான வீரன் என காவல்துறையினர் வர்ணித்துள்ளனர்.

மசூதிக்குள்ளிருந்தவர்களின் உடனடியான வலுவான செயற்பாடுகளே பாரிய உயிரிழப்புகளை தடுத்தன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.