பத்து வருட காலமாக ஆண் குழந்தைகள் பிறக்காத கிராமம்

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 11:05 AM
image

போலந்­தி­லுள்ள கிரா­ம­மொன்றில்  கடந்த சுமார் 10 வருட காலப் பகு­தியில் ஒரு ஆண் குழந்­தையும் பிறக்­கா­த­தை­ய­டுத்து தமது சமூகம் ஆண் வாரிசு இல்­லாத ஒன்­றாக மாறி­வி­டுமோ என  பிராந்­திய அதி­கா­ரிகள்  கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தின் மேய­ரான ரஜ்முன் பிறிஸ்ச்கோ, அடுத்து ஆண் குழந்­தையை பிர­ச­விக்கும் தம்­ப­திக்கு அதி­ச­யிக்­கத்­தக்க பரிசை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார். அவர் இரு பெண் பிள்­ளை­களின் தந்தை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

92 வீடு­களில் சுமார் 300 பேர் வசிக்கும் அந்தக் கிரா­மத்தில் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து எவ­ருக்கும் ஆண் குழந்தை எதுவும் பிறக்­க­வில்லை. இந்­நி­லையில் இது தொடர்பில் ரஜ்முன் கூறு­கையில், "எமது கிரா­மத்தில் ஏன் ஆண் குழந்தை எதுவும் பிறக்­காது உள்­ளது என்­பது  தனக்குப் புரி­ய­வில்லை என்று தெரி­வித்தார்.  

மேற்­படி மியஸ்சை ஒட்ர்­ஸான்ஸ்கி  கிரா­மத்தில் நீண்ட கால­மாக எதிர்­பார்த்துக்  காத்­தி­ருக்கும் ஆண் குழந்­தையை எவர்  பிர­ச­விக்­கி­றாரோ அந்தக் குழந்­தையின் பெயர் வீதி­யொன்­றுக்கும்  கரு­வாலி மர­மொன்­றுக்கும் சூட்­டப்­ப­ட­வுள்து.­  அந்தக் கிரா­மத்தில் இறு­தி­யாக ஆண் குழந்தை பிறந்த 2010 ஆம் ஆண்டில்  அங்கு 12  பெண் குழந்­தைகள் பிறந்­தி­ருந்­தன.

நான்  எனக்­கென ஒரு  மகனைப் பெற்றுக்கொள்ள  விரும்­பு­கி­றேன. ஆனால் அது நிஜத்தில் நிறை­வே­ற­வில்லை. எனது அய­ல­வரும் ஆண் குழந்­தையை விரும்­பினார். ஆனால் அவ­ருக்கு இரு பெண் குழந்­தை­களே பிறந்­துள்­ளன. இங்கு பெண்கள் ஆண் குழந்­தை­களைப் பிர­ச­விப்­பார்கள் என நான் நினைக்­க­வில்லை" என அந்தப் பிராந்­தி­யத்தின் தீய­ணைப்புப் படையின் தலைவர் தொமாஸஸ் கொலாஸஸ் தெரி­வித்தார். உள்ளூர் பெண்ணைத் திரு­மணம் செய்த தனக்கு இரு பெண் குழந்­தைகள்  உள்­ள­தாக அவர் கூறினார்.

அந்தப் பிராந்­திய தீய­ணைப்புப் படையில் அதி­க­ளவில் பெண்­களே கட­மை­யாற்­று­கின்­றனர். ஆண் குழந்­தைகள் இல்­லா­ததால் எதிர்­கா­லத்தில் தமது பாரம்­ப­ரிய விவ­சாயத் தொழிலை மேற்­கொள்ள முடி­யாது போய் விடுமோ என அந்தக் கிரா­மத்தைச் சேர்ந்த மக்கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக தெரிவிக்­கப்ப­டு­கி­றது. இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் ஆண் குழந்­தைகள் பிறக்­கா­த­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களை நடத்தி வரு­வ­தாக மேயர்   பிறிஸ்ச்கோ கூறினார்.

போலந்தின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் அந்­நாட்டில்  பெண் குழந்தைகளை விடவும் அதிகளவில் ஆண் குழந்தைகளே பிறந்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் அந்த வருடத்தில் 207,000 ஆண் குழந்தைகளும் 196,000  பெண் குழந்தை களும் பிறந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தர பிரதேச சிறுமியிடம் இருவர் அத்துமீறி...

2025-03-27 12:32:04
news-image

காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம்...

2025-03-27 11:47:19
news-image

தென்கொரியாவில் காட்டுத் தீ : அங்குள்ள...

2025-03-27 08:53:28
news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10