வவுனியா குருமன்காட்டில் இன்று  (12.08) இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5மணியிலிருந்து  இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல்,வாள்,கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞர் குழுக்கள் மதுபோதையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.