(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக பதுளை -  வில்ஸ்பாக் மைதானத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது. 

சர்வமத வழிப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

எதிர்கால ஜனாதிபதியே வழ்க , எங்கள் தலைவரே வாழ்க போன்ற வாழ்த்து கோஷங்களுடன் பெரும் மாலைகளை அணிவித்தும், பொன்னாடை கௌரவம் என சஜித் பிரேமதாசவிற்கு வர்வேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த பேரணியில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ரவீந்ர சமரவீர, அஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்க, சந்ராணி பண்டார , லக்ஷ்மன் செனவிரத்ன, அரவிந்ந குமார், இராஜாங்க அமைச்சர்களான  எரான் விக்ரமரத்ன , வடிவேலு சுரேஷ் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற ஊறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக ஒன்றுத்திரண்டிருந்த மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய கடித உரைகளை அமைச்சரிடம் கையளிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. மாலை  4.30 மணிக்கு மத வழிப்பாடுகளுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகியது. 

சஜித் பிரேமதசவை ஜனாதிபதியாக அறிவிக்காத போதிலும், பெரும் ஆரவாரத்துடன்  சஜித் பிரேமதாசவை  வரவேற்றனர்.  அமைச்சர் சஜித் பிரேமதாச தனது வாகனத்தில் இருந்து இரங்கிய இடத்தில்  இருந்து பேரணி மேடைவரையும்  அவரை மக்கள் தூக்கி  வந்தனர்.  

தமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச என்று கூறியும்  அவருக்கு ஆதரவளித்து  புகைப்பட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பினர். அமைச்சரின் சஜித் பிரேமதாசவின் உரையின் போது அவரின்  கருத்துக்கு  ஆதவளித்து மக்கள் கோசம் எழுப்பினர்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின்  உரையுடன் இசை நிகழ்ச்சியோடும் வான வெடிகளுடன் பேரணி  நிகழ்வு நிறைவுக்கு வந்தது.