(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வீதியிறங்கி போரடி  உயிர்தியாகம் செய்யவும் நான் தாயர். என்னுடைய வாக்குறுதிகளை நம்பி  என்னுடன் கைகோருங்கள் என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அணியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் இடம்பெற்று வருகிறது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவ ஆட்சியின் ஊடாக  மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. இராணுவத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கததிற்கு காணப்படுகின்றது. இந்த பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலக முடியாது. எமது அரசாங்கத்தில் தீவிரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். இன்று நாட்டின் இறையாண்மை  அரசியல் பிரச்சாரத்திற்காக  பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.

சர்வதேவசத்திடம் நாட்டில் இறையாண்மையினை  விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்   இலங்கை பிரஜைகளாகவே உள்ளார்கள் எவரும்.   

பிற நாட்டு குடியுரிமையினை பெறவில்லை. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த  ஒப்பந்தங்களும் எவருடனும் செய்துக் கொள்ளவில்லை. இனியும் செய்ய போவதும் இல்லை. பொய்யுரைக்காத சிறந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள்  ஏற்படுத்த வேண்டும். 

ஒரு இனத்திற்கு மாத்திரம்  அரசாங்கம் உருவாக்கப்படாது. அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவம் அரசாங்கம் நிச்சயம் தோற்றுவிக்கப்படும். நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார். பலமான  ஆட்சியினை தோற்றம் பெறுவதற்கு  அனைத்து இன மக்களும் கட்சி பேதங்களையும் மறந்து  ஒன்றுப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.